அமைச்சரவையில் மற்றுமொரு திருத்தம்..!

image_pdfimage_print

மீண்டும் அமைச்சரவையில் திருத்தம்..!

நாட்டின் அமைச்சரவையில் மற்றுமொரு திருத்தம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஷஷிந்திர ராஜபக்ஷ இந்த விடத்தை உறுதி செய்துள்ளார்.

மேலும் அதற்கமைய பல அமைச்சரவை அமைச்சுக்கள் மாற்றமடையவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.