திடீரென மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு -கூட்டத்தில் உண்டான பரபரப்பு..!!

திடீரென மயங்கி விழுந்த பெண் உயிரிப்பு..!

பேருவளை பிரதேச பாடசாலை ஒன்றில் PCR பரிசோதனை மேற்கொள்ள சென்ற பெண் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
PCR பரிசோதனை மேற்கொள்வதற்கான வரிசையில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு வரிசையில் நின்றவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.