நாட்டில் புதிய முறைமையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை..!

புதிய முறைமையில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் நோய் நிலைமையின் அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய மத்திய நிலையங்களுக்கு அனுப்புதல் அல்லது வீட்டினுள் வைத்து பராமரிப்பதற்காக இன்று முதல் புதிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணத்தினுள் புதிய முறைமை செயற்படுத்தப்படவுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய முறைமையின் கீழ் 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் ஒன்றில் தனது நோய் நிலைமை குறித்து தொற்றாளர் அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறுந்தகவல் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.