8 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்த நபருக்கு வழங்கிய தண்டனை!

கனடாவில்…

கனடாவில் 8 வயது சிறுமியை 3 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த நபருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள மாண்ட்ரீல் நகரத்தைச் சேர்ந்தவர் சில்வைன் வில்லேமெயர் (Sylvain Villemaire). 60 வயதாகும் இவர் பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மனோதத்துவ ஆசிரியராக பணியாற்றியாவர்.

இவர் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஐவரி கோஸ்டில் (Ivory Coast) இருந்து மாண்ட்ரீலுக்கு ஒரு வெளியீட்டுத் தடையின் கீழ் அடையாளம் காண முடியாத பெண்ணை அழைத்து வந்தார்.

பின்னர், சராசரியாக வாரத்திற்கு நான்கு முறை என தொடர்ந்து மூன்று வருடங்களாக அச்சிறுமியை கொடூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் 2018-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த குற்றத்திற்காக, வில்லேமெயருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மேலாக, வில்லேமெயர் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு 25 வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கும் பொது இடங்களிலிருந்தும் அவர் நிரந்தரமாக தடை செய்யப்படுகிறார்.
கூடுதலாக, வில்லேமெயர் ஒரு ஆபத்தான குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட வேண்டும் என்று கோரிகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.