இத்தாலியில் இருந்து தனது திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞன் மரணம்..!!

image_pdfimage_print

இத்தாலியில் இருந்து வந்த நபர் கொரோனாவினால் மரணம்..!!

இத்தாலியில் இருந்து தனது திருமணத்திற்காக இலங்கை வந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞன் மற்றும் அவரது தாயாரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மொன்சோ நகரத்தில் தொழில் செய்து வந்த இளைஞன் இலங்கை வந்துள்ளார்.
திருமணம் செய்துக் கொள்வதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இலங்கை வந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. இலங்கை வந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞர் 27 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்துள்ளார்.

இந்த இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் அவரது தாயாரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இவ்வாறு குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தாயும் மகனும் தங்கொட்டு வடக்கு கோனவில கிராகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.