இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் மீண்டும் விமான போக்குவரத்து! – குவைத் வெளியிட்ட செய்தி..!

இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் மீண்டும் விமான போக்குவரத்து…

இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் மீளவும் விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

அன்மையில் உலக நாடுகளில் கோவிட் தொற்று வேகமாக பரவிய நிலையில், குவைத் அரசாங்கம் விமான போக்குவத்திற்கு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் மீண்டும் விமான சேவையை தொடங்கவுள்ளதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியா, எகிப்து, வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.