இலங்கை மக்களுக்கு விசேட உரை ஒன்றை நடாத்த உள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதியின் முக்கிய உரை..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நடாத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதற்கான நேரம் மற்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலினை கட்டுப்படுத்த நாட்டை மூடுமாறு பல்வேறு தரப்பினர் ஜனாதிபதியிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.