நாட்டில் இனி எரிபொருள் தட்டுப்பாடு இல்லை..!வெளியான செய்தி..!!

image_pdfimage_print

நாட்டில் இனி எரிபொருள் தட்டுப்பாடு இல்லை…

இலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இன்று (20) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 22 நாட்களுக்கு தேவையான டீசல் மற்றும் 18 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் நாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் மேலும் ஒரு எரிபொருள் கப்பல் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.