நேற்றைய தினம் இடம்பெற்ற கோர விபத்து..பரிதாபமாக பலியான நபர்..!!

விபத்தில் ஒருவர் பலி..!

நேற்றைய தினம் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாகம பகுதியில் நேற்று (19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் குடாகம பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராஜ் விஜயவீரன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டி பாதையை கடக்க முற்பட்டவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளதுடன் விபத்துக்கு உள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கையிலே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி தப்பியோடி ஹட்டன் பொலிஸில் ஆஜராகியுள்ளதுடன் சடலம் கொட்டகலை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் நடாத்தி வருகின்றனரர்.