தெற்காசியாவிலேயே முதலிடத்தில் இலங்கை:ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நிலை…!

தெற்காசியாவிலேயே மரண வீதத்தில் முதலிடத்தில் இலங்கை..

இலங்கையில் மக்கள் சனத்தொகையில் மில்லியனுக்கு ஒப்பீட்டளவில் நாளாந்தம் இடம்பெறுகின்ற கொரோனா உயிரிழப்புக்களின் வீதத்தின் அடிப்படையில் தெற்காலிய வலய நாடுகளிடையே இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 195 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.