நாடு பெரும் ஆபத்தை சந்திக்கும்! ஜனாதிபதியின் எச்சரிக்கை..!!

ஜனாதிபதியின் எச்சரிக்கை…

நமது நாட்டை மீளவும் ஒரு முறை முழுமையாக முடக்கினால், நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்குள்ளாகும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) நேற்றைய தினம் ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்.

இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நாட்டை முழுமையாக முடக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது.

எனவே நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.