நாட்டில் சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரிப்பு..!

image_pdfimage_print

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்றுப் அதிகரிப்பு!

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கொரோனாத் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு “பெற்றோர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும்” – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.