முகக்கவத்தை வீசாதீர்கள்: பொலிஸார் விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!

பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை..

தற்போது இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கின்றது. இதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இலங்கையில் கொரோனா தொற்று அச்சறுத்தலுக்கு மத்தியில், முகக் கவசத்தைப் பயன்படுத்திவிட்டு அவற்றை பொது இடங்களில் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வீசிச் செல்கின்றனர்.

அவ்வாறு வீசுபவர்களை கைது செய்யும் தீர்மானத்தை பொலிஸாரும், சிங்கள சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவும் எடுத்துள்ளனர்.
முறையாக அவற்றை அழித்துவிடாமல், பொது இடங்களில் வீசுபவர்கள் இனி கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.