கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் விழுந்து த.ற்.கொ.லை..!

கர்ப்பிணி பெண் ஒருவர் த.ற்.கொ.லை..!

வவுனியாவில் கிணற்றுக்குள் விழுந்து த.ற்.கொ.லை.க்.கு முயற்சித்த கர்ப்பிணி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவது வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவர் கிணற்றுக்குள் குதித்து த.ற்.கொ.லை.க்.கு முயற்சி செய்துள்ளார்.

இதன் பின்னர் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணை கிணற்றில் இருந்து மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த கர்ப்பிணிப் பெண் மரணமடைந்தார்.

மரணமடைந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.