கொழும்பு பேருந்துகளில் புதிய மாற்றம்…!

image_pdfimage_print

கொழும்பு பேருந்துகளில் ஏற்படவுள்ள மாற்றம்…!

எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகளை வாங்க போக்குவரத்து அமைச்சு தயாராகி வருகின்றது.

மாநகரப் பேருந்து திட்டத்திற்காக 200 எரிபொருள் மூலம் இயங்கும் பேருந்துகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் மின்சார பேருந்துகள் இதுவரையில் இயங்காததால், முதலில் 25 மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்து சிறிய திட்டமாக முதலில் முன்னெடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொட்டாவ, மாகும்புர போக்குவரத்து மையத்தில் இருந்து கொழும்பு நகரத்தின் வீதிகள் பலவற்றில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்கமைய சார்ஜ் செய்ய தேவைப்படும் சார்ஜிங் நிலையங்கள் சூரிய சக்தியால் கட்டமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.