நேற்று இடம்பெற்ற கோர விபத்து…சிறுவர்கள் இருவர் பலி..!!

image_pdfimage_print

விபத்தில் சிறுவர்கள் பலி..!

ஹம்பேகமுவ – மயிலவல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிறுவர்கள் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

வேலிஓய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.