ஊரடங்கு காலத்தை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை…!

image_pdfimage_print

ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை…

இலங்கையில் தற்போதுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் நிஹால் அபேசிங்க கோரிக்கை dவிடுத்துள்ளார்.

இது குறித்து அனைத்து நிபுணர்களின் சார்பாகவும் பேசுவதாகவும் மருத்துவர் அபேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பூசி மட்டும் தெரிவாகாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க அதிகாரிகள் முயன்றதனால் தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நாங்கள் தவறவிட்டோம் என்றும், அப்படித்தான் அந்த இறப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.