‘காஞ்சனா 3’ பட நடிகை தூக்கிட்டு த.ற்.கொ.லை..வெளியான காரணம்..!!

‘காஞ்சனா 3’ பட நடிகை த.ற்.கொ.லை…!

அன்மையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்தவர் நடிகை அலெக்ஸாண்ட்ரா. அப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் ராகவா லாரன்சின் காதலியாக ரோஸி எனும் கதாபாத்திரத்தில் அலெக்ஸாண்ட்ரா நடித்திருந்தார்.

ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான இவர் கோவாவில் தனது காதலருடன் தங்கி வந்துள்ளார்.
24 வயதாகும் அலெக்ஸாண்ட்ரா, கடந்த வியாழனன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

தனது காதலரை பிரிந்ததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவர் த.ற்.கொ.லை செய்து கொண்டதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை அலெக்ஸாண்ட்ராவின் திடீர் மரணம் குறித்து கோவா போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு, நடிகை அலெக்ஸாண்ட்ரா, சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, போலீசில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.