தூக்கத்தில் கண்விழித்து கதறிய பெண்! இருட்டில் தெரிந்த கொடூர உருவம்…!!

image_pdfimage_print

இந்தியாவில்….

இந்தியாவில் உள்ள பரமக்குடியில் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்மணி கண்விழித்து பார்த்த பொழுது கருப்பான உருவம் ஒன்று தென்பட்டதால் பயந்து அழுதுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் லட்சுமி(32). இவர் நள்ளிரவில் தனது அறையில் நன்றாக தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ ஒரு சத்தம் கேட்டதால் கண் விழித்துள்ளார்.

அதன் போது பீரோவுக்குப் பக்கத்தில் கருப்பான உருவம் ஒன்று நிற்பது போல் தெரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி உடனே படுக்கையை விட்டு எழுந்து லைட்டை போட்டுள்ளார்.

இதன் போது குறித்த பெண் எதிர்பாராத நேரத்தில் ஒரு ஆண் உருவம் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதனை அடுத்து அவர் உடனே கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை மடக்கி பிடித்து கம்பியில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெயர் சுடலை என்பதும் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திருடன் என்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் பொதுமக்கள் உடனே நடந்த சம்பவம் குறித்து பொலிஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுடலையை விசாரித்த பொழுது அவர் செய்த தவறை ஒப்பு கொண்டுள்ளார்.

மேலும் அன்றிரவு மட்டும் சுடலை 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஒருநாள் இரவு மட்டும் 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 3 சவரன் தங்க நகைகளை திருடி பாக்கெட்டில் மறைத்து வைத்த்திருந்தார். அதனை பொதுமக்கள் மற்றும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.