நடுவானில் குழந்தையை பெற்ற பெண்..!

image_pdfimage_print

நடுவானில் குழந்தையை பெற்ற ஆப்கான் பெண்…!

அமெரிக்க விமானத்தில் நடுவானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் பலர் வெளிநாடுகளுக்கும் தப்பி ஓடி வருகின்றனர்.

அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இரவும் பகலுமாக ஆப்கான் மக்களை காபூலில் இருந்து விமானம் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

காபூல் விமான நிலையத்திற்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க போவதில்லை என்று தாலிபான்கள் அறிவித்ததை தொடர்ந்து விமான நிலையத்தை நோக்கி மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.