நாட்டின் கொவிட் தடுப்பிற்கு சம்பளத்தை நன்கொடை செய்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்…!

image_pdfimage_print

பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானம்….!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய இம்மாத சம்பளத்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக நன்கொடை வழங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்றைய தினம் (22) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விஷேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி அதனூடாக குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.