நாளை நாட்டிற்கு வரவுள்ள ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள்!

image_pdfimage_print

நாளை நாட்டிற்கு வரவுள்ள தடுப்பூசி டோஸ்கள்!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளைய தினம் நாட்டிற்கு வந்தடைய உள்ளன.

அதற்கமைய, மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாளை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கைக்கு நன்கொடையாக கிடைக்கப்பெற்ற மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 15.7 மில்லியனாக அதிகரிப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.