மனைவியின் கொடூர செயல் – பரிதாபமாக உயிரிழந்த கணவன்..!

image_pdfimage_print

கணவனை கொன்ற மனைவி..

இரத்தினபுரியில் கணவனிற்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொ.லை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இளம் தாயையும், கள்ளக்காதலனையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம், இரத்தினபுரி- கிரிவெல்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த தம்பதியின் 8 வயது குழந்தை இப்பொழுது பெற்றோரின் அரவணைப்பை இழந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வழமைபோலவே ஆடைத்தொழிற்சாலைக்கு கடந்த 20ஆம் திகதியன்று வந்திருந்த அப்பெண் வேலை செய்துகொண்டிருந்த போதே, மனிதவள முகாமைத்துவ திணைக்களத்துக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது.
அது தொடர்பில், அப்பெண்ணுக்கு அறிவித்த திணைக்களம், வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த பெண் வீட்டுக்கு சென்றபோது, கணவன் உயிரிழந்திருந்தார். எனினும், கத்திப்புலம்பி ஊராரை கூப்பிட்டுவிடாமல், தன்னுடைய கணவன் கொரோனாவால் மரணமடைந்து விட்டார் என அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

அதன் காரணமாக , சடலத்தைப் பார்ப்பதற்கு யாரும் வரவில்லை.
இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை, பொலிஸார் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றால் அவர் மரணிக்கவில்லை என்றும் செயற்கையான மூச்சுத்திணறல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்றும் கண்டறியப்பட்டது.