இலங்கையில் கொரோனா தொற்று 4 இலட்சத்தை தாண்டியது…!

image_pdfimage_print

இலங்கையில் கொரோனா தொற்று 4 இலட்சத்தை கடந்தது…

இலங்கையில் மேலும் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த தொற்றாளர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நாட்டின் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3348,930 க அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 46,605 பேர் வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.