நாட்டில் நடக்கும் கொடுமை…11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு…!!

image_pdfimage_print

11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு…!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை இன்று (25) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிற மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்பாக விகாரையில் வந்து தங்கிருந்து படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நீண்டகாலமாக குறித்த சிறுவனுக்கு பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான இன்று (25) சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிக்குவை கைது செய்ததுடன் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் கைது செய்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.