யாழில் நடந்த கொடூரம்! அடித்துக் கொ.லை செய்யப்பட்டு கிடந்த நபர்..!

யாழில் நடந்த கொடூரம்..!

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பிரதேசத்தில் காணி பிரச்சினையினால் நடந்த மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன்  அவரது மகள் தலையில் பலத்த காயத்துடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,  
உயிரிழந்த  நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்துள்ளது,  இந்நிலையில்  வெளிநாட்டிலுள்ள ஒருவரின் காணியை பராமரிக்கும் சகோதரர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று அந்தக் காணியில் மற்றொருவர் உள்ளதாக அறிந்த சகோதரர்கள் இருவரும் அங்கு சென்று அவருடன் முரண்பட்டதுடன் கம்பியால் தாக்கியதில்  தாக்குதலுக்குள்ளான இராசநாயகம் ரெஜியானந்தன் (வயது 49) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காணிப் பிரச்சினையில் உயிரிழந்தவருக்கும் அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் அந்த நபரும் அவரது மகளும் காயமடைந்த நிலையில், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆனாலும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த  சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நடாத்தி வருகின்றனர்.