ஊரடங்கு தொடர்பில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு…!

image_pdfimage_print

ஜனாதிபதியின் ஆலோசனை…!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில், அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.  

வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை பரிந்துரைகளை முன்வைத்த வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறை முக்கியஸ்தர்கள் ஆகியோர், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு தொடர்பான விசேட கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் இதன்போது, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதோடு, இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பிரதேசங்கள் காணப்படுமாயின், அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள, சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.