ஜனாதிபதியிடம் யாழ்.தமிழர் கொடுத்த பல மில்லியன் ரூபாய்!

ஜனாதிபதியிடம் யாழ்.தமிழர் வழங்கிய 10 மில்லியன் ரூபாய்!

நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு மாத சம்பளத்தை அமைச்சர்களிடம் கோரியுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ‘இடுகம’ கொரோனா சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 10 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இதற்கான காசோலையை வழங்கியுள்ளார்.