பூநகரி கடல் பகுதியில் மிதந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு…!

பூநகரி கடல் பகுதியில் சடலம் மீட்பு…!

பூநகரி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பூநகரி – சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மிதந்த நிலையில் காணப்பட்ட சடலம் மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதை அடுத்து இந்த சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளார்.