மூக்கை வெட்டிய பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு..!

மூக்கை வெட்டிய பெண்…!

கேகாலை, தெரனியகல பிரதேச சபை தலைவரை பெண் ஒருவர் கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இந்த கத்திக்குத்தில் காயமடைந்த தெரனியகல பிரதேச சபை தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரனியகல சந்தைக்கு அருகில் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவது தெரனியகல பிரதேச சபை தலைவர் சென்ற வாகனம் கடை ஒன்றிற்கு அருகில் நிறுத்திய போது அவருக்கு நெருக்கமான ஆதரவாளரான பெண் ஒருவர் அவ்விடத்திற்கு வந்துள்ளார்.

இதன் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கலந்துரையாடலுக்கு இடையில் திடீரென பெண் கத்தியை எடுத்து குத்த முயற்சித்துள்ளார்.

எனினும் அதனை தடுக்க அவர் முயற்சித்த போது மூக்கில் பாரிய வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.