அரசியலில் மகிந்தவின் மற்றுமொரு மகன்…

நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, பிரதமர் அலுவலக பிரதானி யோஷித்த ராஜபக்ஸவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசேட கோரிக்கைக்கு அமைய, அஜித் நிவாட் கப்ரால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பசிலின் வருகைக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை இராஜினாமா செய்த ஜெயந்த கெட்டகொடவுக்கு இந்த பதவியை வழங்கவும் ஒருதரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.