உலகிலேயே முதன் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நாடு…

குழந்தைகளுக்கு தடுப்பூசி…

உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா முன்னெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியிலே குழைந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 2-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியை கியூபா ஆரம்பித்துள்ளது.

மேலும் சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது. இருப்பினும் கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.