கணவரின் கண் முன்னே கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொ.டூ.ர.ம்..! உடல் நசிங்கிய கோர காட்சி..!!

இந்தியாவில்….

இந்தியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் பஸ் டயருக்குள் சிக்கி கொண்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவர் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி பிரியா(22). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையிவ் பிரியா 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். சில தினங்களுக்கு முன் பாபு, அவரது மனைவி மற்றும் குழந்தை மூவரும் திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அதன்போது பாபு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பைக்கின் பின்னாடி உட்காந்திருந்த பிரியா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

அதன் போது அவருக்கு பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் பிரியா சிக்கி கொண்டு சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் பிரியாவை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் ஆரணி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கணவரின் கண்முன்னே பிரியா துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.