சிறுத்தையை எதிர்த்து சீறும் பூனை… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காணொளி…!

image_pdfimage_print

சிறுத்தையை பார்த்து சீறும் பூனை…

கிணற்றில் சிறுத்தையை எதிர்த்து பூனை சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது பூனை கிணற்றின் சுவரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது.

அதை துரத்தி பிடிக்க சென்று சிறுத்தை தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்துள்ளது. கிணற்றின் சுவரில் மேல் நின்று கொண்டிருந்த பூனையை பிடிக்க சிறுத்தை முயற்சித்த போது பூனை சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேராக மோதுவது போல நின்றுள்ளது.

இந்த லிங்கின் ஊடாக இந்த காணொளியை பார்க்கலாம் http://pic.twitter.com/eMJ8hzfFaK

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவி வருகின்றது. இது குறித்து நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறியதாவது, பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்து சிக்கி கொண்டது.

இந்த நிலையில் கிணற்றில் மாட்டி கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு காட்டுக்குள் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.