தனது நண்பனை வெறிவெறித்தனமாக கொ.லை செய்த 13 வயது சிறுவன்..கொடூரமாக சிதறிக்கிடந்த உடல்..!!

இந்தியாவில்…

இந்தியா-உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுவன் தனது நண்பனை கொடூரமா கொ.லை செய்து காட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹாமிர்பூர் மாவட்டத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது சிறுவனுக்கும்,  அதே காலனியில் உள்ள சுப்பி என்ற இளைஞரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் சுப்பியிடமிருந்து இந்த சிறுவன் 60 ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை சிறுவனால் கொடுக்க முடியவில்லை.

இதனை அடுத்து சுப்பி வாங்கிய கடனை திருப்பி கொடுக்குமாறு சிறுவனை தினமும் தொல்லை செய்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுவன் சுப்பியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டிற்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவருக்குள் சண்டை முற்றியதால் அந்த சிறுவன் சுப்பியை கொடூரமாக கொ.லை செய்து விட்டு அருகே இருந்த புதரில் தூக்கி வீசி விட்டு எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த புதன் கிழமை பொலிசாருக்கு இந்த கொ.லை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இதன் பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் காட்டு விலங்குகளால் சிதைக்கப்பட்டு 11 பாகங்களாக கிடந்த சுப்பியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொ.லை செய்த 13 சிறுவனின் மீது பொலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.