நாட்டில் தடுபூசி தொடர்பில் வெளியான முக்கிய செய்தி…!

தடுப்பூசி குறித்து வெளியான செய்தி…!

நாட்டில் இரண்டாவது சினோபாம் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், அஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை போடுவது முறையற்றதெனவும், அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி வழங்குவது குறித்து தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் அனுமதியுடன் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை கடைப்பிடிப்பது அவசியமாகும் எனவும் மருத்துவ சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.