பாடசாலை மாணவர்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள அவசர நடவடிக்கை…!

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசித்திட்டம்…

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விசேட குழுவின் ஆலோசனைக்கமைய விரைவாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி மற்றும் தொற்று நோய் தொடர்பிலான விசேட குழுவினால் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய முறை தொடர்பில் ஒழுங்கு முறை ஒன்று தயாரிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை தயாரித்த பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.