வவுனியாவில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்…!

வவுனியாவில் விபத்தில் இளைஞன் பலி…

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

நேற்றைய தினம் (06) இரவு இடம்பெற்ற விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஈரப்பெரியகுளம் சந்தியில் எதிரே வந்த கடற்படையின் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் அனுஸ்க அபயரத்தின லக்மால் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளவராவார்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணையினை ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகந்தன் தலைமையில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.