கோட்டாவின் அதிரடியான உத்தரவு…!

image_pdfimage_print

ஜனாதிபதி கோட்டாபய!

நாட்டில் உள்ள பாரிய அளவான அரிசி ஆலைகளை சுற்றிவளைத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தொகையை சந்தோசமாக சதொச விற்பனை நிலையம் ஊடாக அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு விற்பனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

இதனை அடுத்து வர்த்தக அமைச்சர், நுகர்வோர் விவகார அமைச்சர், அத்தியாவசிய தேவைகள் ஆணையாளர், நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் சூம் தொழில்நுட்பம் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுத்துள்ளனர்.

அதன்படி நாளைய தினம் பொலனறுவைக்கு செல்லும் விசேட குழு அரிசி ஆலைகளை முற்றுகையிட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசிகளை அரசாங்கத்திற்கு கையகப்படுத்த உள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை புறக்கோட்டை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசியை பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அதிரடியாக சுற்றி வளைத்து அரசு மயமாக்கி உள்ளன.

இந்த அரிசி அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு நாட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
அத்துடன் சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.