பொலிஸ் அதிகாரியின் கடலோர குசும்பு… கட்டிவைத்து உதைத்த கிராம வாசிகள்…!!

image_pdfimage_print

பொலிஸைக் கட்டிவைத்து உதைத்த கிராம மக்கள்…

தவறான நடத்தை காரணமாக சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவில் பணி செய்யும் உப பொலிஸ் பரிசோதகரின் பணி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் அண்மையில் இரவுவேளையில் குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி திருமணமாகாவர். இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.