வவுனியாவில் மற்றுமொரு கோர விபத்து… இருவர் பலி…!

image_pdfimage_print

விபத்தில் இருவர் பலி…

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் A9 வீதியில் பயணித்த பிக்கப் வாகனமும், டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவரும் தகவல்.

இன்று வவுனியாவில் இருந்து ஏ9 வீதி ஊடாக பயணித்த பிக்கப் வாகனமும் வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் கனகராயன்குளம் சந்திக்கு அண்மையில் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.