ஊரடங்கு நீடிப்பதா..?இல்லையா..? நாளை தீர்மானம்..!

ஊரடங்கு நீடிப்பா..?

இலங்கை முழுவதும் தற்போது எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது குறித்த தீர்மானம் நாளை  எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொவிட்-19 தடுப்புக்கான செயலணி கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் போதே அது தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.