கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்..!

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்…

கொரோனா தொற்றுடைய 27 வயதுடைய கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ள சம்பவமொன்று கொழும்பு டி சொய்சா மகப்பேறு வைத்தியசாலையில் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் குறித்த தாய் மற்றும் குழந்தைகள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.