தொட்டிலில் சிக்கி பரிதாபகரமாக பலியான 11 வயது சிறுமி ..!

image_pdfimage_print

தொட்டிலில் சிக்கி பலியான சிறுமி ..

கேகாலை மாவட்டம் மாலிபொட தோட்டத்தின் நிந்தகம பிரிவில் தொட்டிலில் சிக்கி 11 வயது சிறுமியொருவர் பரிதாபகரமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேகாலை – தெரணியகலை, மாலிபொட தோட்டத்தில் 06ஆம் திகதி மாலை 4 மணியளவில் தனது வீட்டிலுள்ள தொட்டிலில் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தொட்டிலில் சிக்குண்டு உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தொட்டிலில் சிக்குண்ட சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்
குறித்த சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெரணியகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.