நாட்டில் இரு தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 3ஆவதாக போடப்படும் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்..!

image_pdfimage_print

3ஆவதாக போடப்படும் தடுப்பூசி!

நாட்டில் சினோபாம் தடுப்பூசியின் 2 மருந்தளவை பெற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்ற நபர்களுக்கு மூன்றாவது மருந்தளவை வழங்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரை முன்வைத்துள்ளது.

இலங்கை மருத்துவ சங்கம் அறிக்கையொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படுமாயின், அஸ்ட்ரா சேனிகா, ஃபைசர் மறறும் மொடர்னோ ஆகிய தடுப்பூசிகளை செலுத்துமாறும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு (நாட்பட்ட நோய்களுக்கு உள்ளாகாத) சைனோ பாம் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்துமாறு தாம் பரிந்துரை செய்வதாகவும் அந்த சங்கம் தெரிவிக்கின்றது.

அத்துடன், 12 – 18 வயதுக்கு இடைப்பட் சிறார்களுக்கு கொவிட் வைரஸ் தொற்று காரணமாக பாரிய பிரச்சினைகள் ஏற்படாது என்பதுடன், நோய்களுக்குள்ளான சிறார்களுக்கு வைரஸ் தாக்கத்தினால் கடுமையான நோய் அறிகுறிகள் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வயதெல்லையை கொண்ட சிறார்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துமாறும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.