பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் வெளியான முக்கிய செய்தி…!

image_pdfimage_print

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி …

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியே உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் எடுத்துரைத்துள்ளது.

இதற்கமைய 12-18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி தரம்-7 முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றமுடியும் எனக்குறிப்பிடப்படுகின்றது.

இதனூடாக 20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நிலையில் மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு நிறைவடைந்து விட்டால் பாடசாலைகளை விரைவாக திறக்கமுடியும் என
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.