பிரதமர் மஹிந்த குறித்து வெளியிடப்பட்ட போலியான தகவல்…

image_pdfimage_print

பிரதமர் தொடர்பில் வெளிவந்த தவறான செய்தி…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாக மீண்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியானவை போலியானதென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் தொடர்பில் பிபிசி செய்தி சேவையும் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் வேறு நபர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை தவறாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் போலி புகைப்படம் பதிவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போலியான செய்தி வெளியான சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேறு நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டிருந்தாக தெரியவந்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் வேறு நிகழ்வில் ஈடுபட்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.