வீதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவர் மீட்பு …!

அம்பாறையில்…

அம்பாறை – தமன பிரசேதத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் சீன வத்த – கொங்கஸ் சந்தி பிரதேசத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்..

மேலும் கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த இளம் பெண் கடத்தப்பட்டதாக பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வென்னப்புவ – கதானகெதர பொலிஸாருக்கு தாய் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட விசாரணையில் இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அதிகாலை இவ்வாறு அந்த பெண் வீதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது அத்த பெண் அம்பாறை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.