Covid தொற்றை கண்டறிய புதிதாக ஒரு பரிசோதனைக் கருவி!

கொரோனாவை கண்டறிய புதிய பரிசோதனைக் கருவி!

கொவிட் தொற்றை கண்டறிந்து கொள்ள அன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு இடைப்பட்டதாக புதிய பரிசோதனை செய்யக்கூடிய வகையில் இயந்திரம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட சிரேஷ்ட விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லாமவன்ஸா மற்றும் மூத்த விரிவுரையாளர் ருசிகா பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் இந்த இயந்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த கருவியால் கொரோனா தொற்றளர்களை மிக விரைவாகவும் மற்றும் குறைந்த செலவிலும் அடையாளம் காணலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனையை ரூபா 1500க்கு செய்யலாம் என அந்தக் குழு கூறியுள்ளது.

தற்போது குறித்த இயந்திரம் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தொழில்நுட்பக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுப் பதிவுக்காகக் காத்திருக்கிறது.
எனும் இந்த விசேட பரிசோதனைக் கருவி தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.