நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் சென்ற சிறுமிகள்!மூடநம்பிக்கையால் கிராமவாசிகள் செய்த செயல்..!

இந்தியாவில்…

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி அனைவரையும் பரபரப்படைய செய்துள்ளது.

Damoh மாவட்டத்தில் உள்ள புந்தேல்கண்ட் கிராமத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மழை வர வைப்பதற்காக ஆறு சிறுமிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தவளை ஒன்று கட்டப்பட்டுள்ள மரக்கட்டை ஒன்றை அந்த ஆறு சிறுமிகளும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து உள்ளூர் பெண்கள் கூறியதாவது, தங்கள் பயிர்கள் காய்ந்துவிட்டது, மழைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
மழை பற்றாக்குறையை சமாளிக்கும் முயற்சியில், கிராமத்தில் உள்ள சிறுமிகள் நிர்வாணமாக சுற்றி நடக்க வைக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு செய்யப்படும் சடங்குகள் கடவுளின் அருளால் அந்த பகுதிக்கு மழையை உண்டாக்கும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

இந்த சம்பவம் நிகழ்ந்த கிராமம் அமைந்துள்ள தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இது குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு குழந்தைகள் பாதுகாப்புக்கான இந்தியாவின் தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

புத்திகெட்ட மூடநம்பிக்கை கொண்ட மனிதர்களின் இந்த மூடச்செயலை அனைவரும் கண்டித்துள்ளனர்.